

இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் ஆகாஷ் பாஸ்கரன். அதர்வா முரளி - கயாடு லோகர் நாயகன், நாயகியாக நடிக்கும் ‘இதயம் முரளி’ படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
இடையில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’, தனுஷ் நடித்த ‘இட்லிக் கடை’ ஆகிய படங்களைத் தனது ‘டான் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரித் தார். தற்போது ‘இதயம் முரளி’ ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதில் இருந்து ஒரு பகுதி:
தயாரிப்பாளர் - இயக்குநர் இந்த இரண்டில் எது உங்கள் களம்?
இயக்கம்தான். பள்ளிக் காலத்தில் இருந்தே பல குறும்படங்களை எழுதி, இயக்கியிருக்கிறேன். விக்னேஷ் சிவன் என்னுடைய நண்பர். அவரது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் பணி புரிந்தேன். பின்னர் ‘இதயம் முரளி’படத்தைத்தான் முதலில் தொடங்கி னேன்.
கயாடு லோகர், நிகாரிகா இருவருக்குமே இதுதான் முதல் படம். இடையில் ‘பராசக்தி’யைத் தயாரிக்கும் வாய்ப்பு அமைந்த தால் அதில் ஆறு மாதக் காலம் செலவழிக்க வேண்டி வந்து விட்டது. அதன்பிறகு கதைக்குத் தேவைப்பட்டதால் அதர்வா சற்று அடர்த்தியான தாடி வளர்க்க இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.
இப்போது ‘இதயம் முரளி’ வெளி யீட்டுக்குத் தயாராகிவிட்டது. கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறேன். வசனத்தை ரமணகிரி வாசனுடன் இணைந்து எழுதியிருக்கிறேன்.