கேன்ஸ் பட விழா​வில் லோகேஷ் கனக​ராஜின் ‘டிசி’ டிரெய்​லர்

கேன்ஸ் பட விழா​வில் லோகேஷ் கனக​ராஜின் ‘டிசி’ டிரெய்​லர்
Updated on
1 min read

‘ராக்​கி’, ‘சாணிக்​கா​யிதம்’, ‘கேப்​டன் மில்​லர்’ படங்​களை இயக்​கிய அருண் மாதேஸ்​வரன், அடுத்து இயக்​கி​யுள்ள படம் ‘டிசி’. இதில் லோகேஷ் கனக​ராஜ், தேவ​தாஸ் என்ற கேரக்​டரில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இந்த கேங்​ஸ்​டர் டிராமா படத்​துக்கு அனிருத் இசை அமைக்​கிறார். இதில் சந்​திரா என்ற கதாபாத்திரத்தில் வாமிகா கபி​யும் பார்​வதி என்ற கதாபாத்திரத்தில் சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி​யும் நடிக்​கின்​றனர்.

இப்​படத்​தின் புரமோஷன் டீஸர் சில மாதங்​களுக்கு முன் வெளியாகி வரவேற்​பைப் பெற்​றது. இந்​நிலை​யில் இப்​படத்​தின் டிரெய்​லர் தற்​போது நடை​பெற்று வரும் கேன்ஸ் திரைப்​பட​ விழாவில் நாளை வெளி​யிடப்பட இருப்​ப​தாக சன் பிக்​சர்ஸ் அறிவித்​துள்​ளது.

கேன்ஸ் பட விழா​வில் லோகேஷ் கனக​ராஜின் ‘டிசி’ டிரெய்​லர்
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in