‘இன்னும் 10 வருடத்தில் முன்னணி நடிகனாவேன்’ - கேஜெஆர் ராஜேஷ்

நடிகர் கேஜெஆர் ராஜேஷ்

நடிகர் கேஜெஆர் ராஜேஷ்

Updated on
1 min read

தயாரிப்பாளர் கேஜெஆர் ராஜேஷ், கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அங்கீகாரம்’. தென்பாதியான் இயக்கிஉள்ள இதில், சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, மன்சூர் அலிகான், மோகன்ராம் என பலர் நடித்துள்ளனர். ஸ்வஸ்திக் விஷன்ஸ் சார்பில் பிரசாந்த் - அஜித் பாஸ்கர் - அருண்முருகன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஜூன் 26-ம் தேதி வெளியானது. இப்படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.

கேஜெஆர் ராஜேஷ் கூறும்போது, “ஒரு நடிகராக இந்த வரவேற்பு எனக்கு ஆயிரம் சதவீதம் மகிழ்ச்சிஅளிக்கிறது. இந்த விழாவில் ஒரு நடிகராக நிற்பது பெருமையாக இருக்கிறது. இந்தப்படம் பெரிய வெற்றி இல்லை, மீடியம் தான். எனக்குத் தெரிந்தவர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என் காது படவே வேறு கதை எடுத்திருக்கலாம்; வேறு ஹீரோ நடித்திருக்கலாம் என்றார்கள்.

ஆனால் இப்போது மக்கள் வரவேற்பு தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் என இயக்குநர் தென்பாதியான் தான். அவர் சொன்னதை செய்தேன். இன்னும் 10 வருடத்தில் நான் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன்” என்றார்.

<div class="paragraphs"><p><em>நடிகர் கேஜெஆர் ராஜேஷ்</em></p></div>
Kaathal: The Core - இணையரை ரட்சித்து மீண்ட ‘மீட்பர்’ ஓமனா | திரை தேவதைகள் 25

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in