

செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் கென் கருணாஸ் நாயகனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
’யூத்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு பல்வேறு இயக்குநர்கள் கென் கருணாஸ் இயக்க அணுகி வருகிறார்கள். ஆனால், அவரோ வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘ராஜன் வகையறா’ படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே ‘கட்டா குஸ்தி’ படங்களின் இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிக்க கென் கருணாஸ் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றியால் தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் செல்லா அய்யாவு. அப்படத்தின் மூலம் செல்லா அய்யாவு – கருணாஸ் இருவருக்கும் நெருங்கிய நட்பு உருவாகி இருக்கிறது. இதன் மூலம் தனது மகனை நாயகனாக்கி, செல்லா அய்யாவு இயக்கும் படத்தினை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் கருணாஸ்.
இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகும். இதன் இறுதிகட்ட கதை விவாதம் நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த கேள்விக்கு செல்லா அய்யாவு “விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.