‘கருப்பு’ வசூல் வேட்டை - படக்குழு மகிழ்ச்சி

‘கருப்பு’ வசூல் வேட்டை - படக்குழு மகிழ்ச்சி
Updated on
1 min read

‘கருப்பு’ படத்தின் வசூலால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மே 15-ம் தேதி வெளியாகியுள்ள படம் ‘கருப்பு’. மே 14-ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், ஃபைனான்ஸ் பிரச்சினையால் மட்டுமே அடுத்த நாள் வெளியானது. இப்படம் வெளியான முதல் நாளில் மாலை காட்சியில் இருந்து படத்தின் வசூல் அதிகரிக்க தொடங்கியது. மேலும், பல்வேறு திரையரங்குகளில் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டன.

‘கருப்பு’ படம் வெளியான திரையரங்குகளில் பல்வேறு பொதுமக்கள் சாமி வந்து ஆடும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின. இப்படம் முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலைத் தாண்டும் என விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர். மேலும், பல்வேறு சிக்கல்களை தாண்டி வெளியாகி இருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இப்படம் தமிழகத்தின் வசூல் பங்குத் தொகையில் ரூ.50 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சூர்யாவின் படங்களில் அதிக வசூல் செய்யும் படமாக இருக்கும் என்பது தெளிவாகிறது.

தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்து வருகிறது ‘கருப்பு’. உலக அளவில் இப்படம் ரூ.250 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவின் படம் ஒன்று இந்தளவுக்கு பெரிய வசூல் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘கருப்பு’ வசூல் வேட்டை - படக்குழு மகிழ்ச்சி
அமைச்சர் ராஜ்மோகன் குறித்த விஷால் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in