‘சர்தார் 2’-வில் ஆங்கிலப் படங்களுக்கு இணையான முயற்சி: கார்த்தி தகவல்

‘சர்தார் 2’-வில் ஆங்கிலப் படங்களுக்கு இணையான முயற்சி: கார்த்தி தகவல்
Updated on
1 min read

பி.எஸ்​.மித்​ரன் இயக்​கத்​தில் கார்த்தி நடித்த ‘சர்​தார்’, வெற்றி பெற்ற பிறகு அதன் அடுத்த பாகம், ‘சர்​தார் 2’ என்ற பெயரில் உரு​வாகி​யுள்​ளது. இதில் மாளவிகா மோக​னன், ஆஷிகா ரங்​க​நாத், ரஜிஷா விஜயன், எஸ்​.ஜே.சூர்​யா, யோகி பாபு உள்பட பலர் நடித்​துள்​ளனர். சாம் சி.எஸ். இசை அமைத்​துள்​ளார்.

நாளை (செப்​.10) வெளி​யாக இருக்​கும் இப்​படம் பற்றி கார்த்தி கூறும்​போது, “சர்​தார் படத்​தின் கதைக்கு முன்பு நடந்த விஷய​மும், அதற்​குப் பிறகு நடக்​கும் விஷய​மு​மாக ‘சர்​தார் 2’ படத்​தின் கதை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

பெரிய பட்​ஜெட்​டில் உரு​வாகி இருக்​கும் படம் இது. சில ஆங்​கிலப் படங்​களைப்பார்க்​கும் போது நமக்கு ஏக்​க​மாக இருக்​கும், எப்​போது நம் ஊரில் இது​போன்ற விஷுவலோடு, ஆக் ஷனோடு படம் பண்​ணப் போகிறோம் என்ற ஆசை வரும். அதைக் கொடுப்​ப​தற்​கான முயற்​சி​யாக இந்​தப் படத்தை உரு​வாக்கி இருக்​கிறோம்.

அந்த வகை​யில் இயக்​குநர் மித்​ரன் சிறப்​பாகப் பணி​யாற்றி இருக்​கிறார். படப்​பிடிப்பு முடிந்து கிட்​டத்​தட்ட ஒரு வருட​மாக போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்​திருக்​கின்றன. படத்​தின் டீஸருக்​கும், டிரெய்​லருக்​கும் நல்ல வரவேற்பு கிடைத்​துள்​ளது. இந்​தப் படம் பார்​வை​யாளர்​களை மகிழ்விக்​கும்” என்​றார்.

‘சர்தார் 2’-வில் ஆங்கிலப் படங்களுக்கு இணையான முயற்சி: கார்த்தி தகவல்
ரிலீஸுக்கு முன் ரூ.150 கோடி, ரிலீஸுக்குப் பின் ரூ.30 கோடி - ‘டாக்ஸிக்’ ஓடிடி விற்பனையில் சிக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in