

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் 66-வது ஆண்டை நிறைவு செய்து 67-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த 67 ஆண்டுகளில், உண்மையான கற்றலாக நான் கருதுவது சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே.
மீதமுள்ள காலம் கழிவுநீர் ஓட்டத்தோடு அடித்துச் செல்லப்பட்டதைப் போன்றது. இருப்பினும், நம்பிக்கை தரும் விஷயம் என்னவென்றால், அந்த நீரோட்டம் எவ்வளவு இருண்டதாக இருந்தாலும், ‘கூட்டு சினிமா’ எனும் அந்த மாபெரும் வடிவத்தில், அதாவது எல்லையற்ற கடலில் சங்கமிப்பதற்கான காத்திருப்பு தான் அது. கலைஞர்கள், ரசிகர்கள் என நாம் அனைவரும் அதை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
டிசம்பர் 1895-ல் லூமியர் சகோதரர்களின் முதல் பொதுத் திரைப்படக் காட்சிக்குப் பிறகு, திரைப்படத் துறை தோன்றி சுமார் 130 ஆண்டுகளும் 8 மாதங்களும் ஆகின்றன.
அந்த மொத்த வரலாற்றில் 67 ஆண்டு கள், அதாவது பாதிக்கும் மேற்பட்ட காலத்தில் பயணித்திருப்பதாக என் குழுவினர் நினைவூட்டினர். இது வியக்கத்தக்க விஷயம்.
இருந்தாலும் எனது சொந்தக் கணக்கீட்டின்படி, உண்மையான கற்றலாக நான் உரிமை கோரக்கூடியது சுமார் 20 ஆண்டுகள் மட்டுமே. சினிமாவைப் பொறுத்தவரை, ‘ஜென்-ஸி’ தலைமுறையில் மிகவும் மூத்தவன் நானாகத்தான் இருப்பேன்” என்று கூறியுள்ளார்