‘ஜனநாயகன்’ இணை​யத்​தில் கசிந்த விவ​காரம்: ஜவுளிக்​கடை மேலாளரின் முன்​ஜாமீன் மனு தள்ளு​படி

‘ஜனநாயகன்’ இணை​யத்​தில் கசிந்த விவ​காரம்: ஜவுளிக்​கடை மேலாளரின் முன்​ஜாமீன் மனு தள்ளு​படி
Updated on
1 min read

நடிகரும், தவெக தலை​வரு​மான விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ படத்​துக்கு தணிக்கை சான்று கிடைப்​ப​தில் ஏற்​பட்ட சிக்​கலால் மறு ஆய்​வுக்​காக தணிக்கை வாரி​யத்​திடம் நிலு​வை​யில் உள்​ளது.

இப்​படம் இணை​யத்​தில் கசிந்​தது தொடர்​பாக கேவிஎன் புரொடக் ஷன்ஸ் சார்​பில் அளிக்​கப்​பட்ட புகாரின்​பேரில், சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸார் சிலரை கைது செய்​துள்​ளனர். இவ்​வழக்​கில் போலீ​ஸா​ரால் தேடப்​பட்ட திரு​வேற்​காட்​டைச் சேர்ந்த உமாசங்​கர் என்​பவர், முன்​ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை, நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக நடந்​தது. உமாசங்​கர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஆர்​.சி.​பால்​க​னக​ராஜ், மனு​தா​ரர் ஜவுளிக்​கடை நிறு​வனம் ஒன்​றில் மேலா​ள​ராக பணி​யாற்றி வரு​கிறார். அவருக்​கும் இந்த சம்​பவத்​துக்​கும் எந்த தொடர்​பும் இல்​லை, என வாதிட்​டார்.

இதற்கு படத்​த​யாரிப்​புக்​குழு தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் விஜயன் சுப்​ரமணி​யன் மற்​றும் சைபர் க்ரைம் போலீ​ஸார் தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் கே.எம்​.டி.​முகிலன் ஆகியோர் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தனர். அவர்​கள் வாதிடு​கை​யில், “மிகப்​பெரிய பட்​ஜெட்​டில் எடுக்​கப்​பட்ட ஜனநாயகன் படத்தை சட்​ட​விரோத​மாக இணை​யத்​தில் வெளி​யிட்​ட​தில் உமாசங்​கருக்​குத்​தான் முக்​கிய பங்கு உள்​ளது.

உதவி எடிட்​ட​ராக பணி​யாற்​றிய நபரும், அவரது சகோ​தரரும் ஜனநாயகன் படத்தை திருடி வந்து மனு​தா​ரரிடம் அளித்​துள்​ளனர். அவர்​தான் அதை இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்து பகிர்ந்துள்ளார். இதற்கு பின்​னணி​யில் வேறு யார், யார் உள்​ளனர் என்​பதை, உமாசங்​கரை போலீ​ஸார் காவலில் எடுத்து விசா​ரித்​தால் மட்​டுமே உண்மை வெளியே வரும்.

எனவே முன்​ஜாமீன் அளிக்​கக்​கூ​டாது” என வாதிட்​டனர். இதையடுத்து நீதிப​தி, மனு​தா​ரர் மீதான குற்​றச்​சாட்​டு தீவிர​மானது எனக்​கூறி, முன்​ஜாமீன்​ கோரிய உ​மாசங்​கரின் மனுவை தள்​ளு​படி செய்​து உத்தரவிட்டுள்ளார்​.

‘ஜனநாயகன்’ இணை​யத்​தில் கசிந்த விவ​காரம்: ஜவுளிக்​கடை மேலாளரின் முன்​ஜாமீன் மனு தள்ளு​படி
‘கர’ விமர்சனம்: தனுஷ் + விக்னேஷ் ராஜா கூட்டணி சாதித்ததா, சறுக்கியதா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in