த்ரில்லர் கதையாக உருவாகும் ‘இறுதிப்பக்கம் 2’

த்ரில்லர் கதையாக உருவாகும் ‘இறுதிப்பக்கம் 2’
Updated on: 
1 min read

சென்னை: மனோ வெ. கண்ணதாசன் இயக்கத்தில், இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் மையக்கதையில் ஒரு கொலை அரங்கேறுகிறது. அந்த உண்மைக் கொலையை யார் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு தரப்பு தீவிரமான விசாரணையில் இறங்குகிறது. அதேவேளையில், கொலையைச் செய்தவர்கள் தங்களது குற்றம் வெளியில் தெரியாமல் இருக்க அதை மறைக்க முயல்கின்றனர். இந்த விசாரணைப் பயணத்துடன் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் திருப்பங்களையும் இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘குமார சம்பவம்’ மூலம் பிரபலமான குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அபிஷேக் ஜோசப் மற்றும் சத்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

சென்னை மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

த்ரில்லர் கதையாக உருவாகும் ‘இறுதிப்பக்கம் 2’
மும்பையில் சிஜேபி போராட்டம்: நடிகர் இம்ரான் கான், நடிகை லேகா வாஷிங்டன் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in