‘கட்டா குஸ்தி 2’ டீசர் - ஒரு கோடியைக் கடந்த வரவேற்பு

‘கட்டா குஸ்தி 2’ டீசர் - ஒரு கோடியைக் கடந்த வரவேற்பு
Updated on
1 min read

கடந்த 2020 இல் வெளியானது ‘கட்டா குஸ்தி’. வழக்கமான ‘ஸ்போர்ட்ஸ் டிராமா' படம்போல் இல்லாமல், குஸ்தி விளையாட்டு என்பது கணவன் - மனைவி இடையிலான தன்முனைப்பை எவ்வாறு தகர்க்கிறது என்கிற சுவாரசியத்தை நகைச்சுவை கலந்து சித்தரித்தது.

எதிர்பாராத ஆக்‌ஷன் காட்சிகள், நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக வணிகரீதியாகவும் படம் வெற்றிபெற்றது.

விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி இணை அட்டகாசம் செய்திருந்த இப்படத்தை, செல்லா அய்யாவு இயக்கியிருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது. மீண்டும் அதே கூட்டணியில் இம்முறை விஷ்ணு - லட்சுமி குஸ்தி தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் இருப்பதுபோல் அவர்களின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது.

இம்முறையும் நகைச்சுவை, சமூக, குடும்ப விமர்சனம் என்கிற அம்சத்தையே மையப்படுத்தியிருப்பதாக இயக்குநர் கூறுகிறார்.

டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இசையில் உருவாகியிருக்கும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி, 1 கோடியே 30 லட்சம் பேர் அதைப் பார்த்துள்ளனர்.

‘கட்டா குஸ்தி 2’ டீசர் - ஒரு கோடியைக் கடந்த வரவேற்பு
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19
‘கட்டா குஸ்தி 2’ டீசர் - ஒரு கோடியைக் கடந்த வரவேற்பு
மக்களின் முதல்வரை உருவாக்கிய கிங் மேக்கர்! - ஆர்.எம்.வி. 100

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in