பொருளாதார குற்றப் பின்னணியில் ‘கேம் பிளே’

பொருளாதார குற்றப் பின்னணியில் ‘கேம் பிளே’
Updated on
1 min read

‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன், இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்கு ‘கேம் பிளே’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

கிஷோர், சாருகேஷ், ஷாலி நிவேகாஸ், வினோத் கிஷண், சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்துக்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘காளிதாஸ்’ படத்தைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக் ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

“பொருளாதார குற்றத்தை மையமாகக் கொண்ட இப்படம், நொடிக்கு நொடி எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய சஸ்பென்ஸ் புலனாய்வு த்ரில்லராக உருவாகி உள்ளது.

மாறுபட்ட களம் மற்றும் கதை அமைப்புடன், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதன் முதல் தோற்றத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

பொருளாதார குற்றப் பின்னணியில் ‘கேம் பிளே’
உச்ச கட்டத்தில் ஈரான் போர்... நடப்பது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in