ஃபிரேம் அண்ட் ஃபேம் விருது வழங்கும் விழா

ஃபிரேம் அண்ட் ஃபேம் விருது வழங்கும் விழா
Updated on
1 min read

தமிழ் திரைக்​கலைஞர்​கள் மற்​றும் தொழில்​நுட்ப கலைஞர்​களைச் சிறப்​பிக்​கும் வகை​யில், ‘டூரிங் டாக்​கீஸ் ஃபிரேம் அண்ட் ஃபேம்’ திரைப்பட விருது விழா, இன்று (ஜன.25) சென்னை காமராஜர் அரங்​கத்​தில் நடக்​கிறது. சிறந்த திரைப்​படம், நடிகர், நடிகைகள், இயக்​குநர் உள்பட 50 பிரிவு​களில் விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன.

நடு​வர் குழு தலை​வ​ராக கே.​பாக்​ய​ராஜ், நடு​வர்​களாக இளவரசு, அம்மா கிரியேஷன்ஸ் டி.சி​வா, தமிழ்​நாடு திரைப்பட இயக்​குநர்​கள் சங்க தலை​வர் ஆர்​.​வி.உதயகு​மார், பெப்சி தலை​வர் ஆர்​.கே. செல்​வ​மணி, குஷ்பு ஆகியோர் விருது பெறு​பவர்​களைத் தேர்வு செய்​துள்​ளனர்.

நடிகர்​கள் தனுஷ், ரவிமோகன், விஜய் சேதுப​தி, சிவகு​மார், விஜயகு​மார், சுந்​தர்​.சி, யோகி​பாபு, மணி​கண்​டன், துருவ் விக்​ரம், இயக்​குநர் மாரி செல்​வ​ராஜ் உள்பட பலர் இவ்​விழா​வில் கலந்து கொள்​கின்​றனர். தயாரிப்​பாளர் கோகுலம் கோபாலனுக்கு வாழ்​நாள் சாதனை​யாளர் விருதை கமல்​ஹாசன் வழங்​குகிறார்.

ஃபிரேம் அண்ட் ஃபேம் விருது வழங்கும் விழா
முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in