

நடிகர் தம்பி ராமையா கதை, வசனம் எழுத அவருடைய மகன் உமாபதி ராமையா திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘TN 2026’.
கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி குழுமம் தயாரித்துள்ள இப்படத்தில் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் என நட்டிக்கு மூன்று நாயகிகள்.
இவர்கள் இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்குத் தவிர்க்க முடியாத குணச்சித்திரங்களாக வலம்வரும் எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா மூவரும் இதில் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா என ஏகப்பட்ட நடிகர்கள்.
‘லோகா: அத்தியாயம் 1’ மூலம் பிரபலமாகிவிட்ட சாண்டியும் இதில் ஒரு கதாபாத்திரம் ஏற்றுள்ளார். ‘அரசியல், சமூக விமர்சனத்துடன் தேர்தல் நேரத்து நையாண்டியாக இப்படம் உருவாகியிருக்கிறது’ என்கிறார் இயக்குநர் உமாபதி ராமையா.