25 திருநங்கைகளுக்கு ‘டோரதி’ படக்குழு உதவி

25 திருநங்கைகளுக்கு ‘டோரதி’ படக்குழு உதவி
Updated on: 
1 min read

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த், சுந்தர்ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்தை, தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

செப்.11-ம் தேதி வெளியான இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது, திருநங்கைகள் நல அமைப்பான ‘எங்கள் சகோதரன்’ அமைப்பின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ மற்றும் நிதியுதவி தேவைப்படும் 25 திருநங்கைகளை அறிமுகப்படுத்தினர்.

அவர்களில் புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், கை, கால்களை இழந்தவர்களும், பிறவியிலேயே பார்வையற்றவர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்த 25 பேருக்கும் காசோலையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கினார்.

25 திருநங்கைகளுக்கு ‘டோரதி’ படக்குழு உதவி
Call Me Chihiro: ‘அன்பென்னும் மழை’ சிஹிரோ | திரை தேவதைகள் 39

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in