தமிழுக்கு வரும் செம்பன்!

தமிழுக்கு வரும் செம்பன்!
Updated on
1 min read

கடந்த 2024-இல் மலையாளத்தில் வெளியான க்ரைம் த்ரில்லர் படம் ‘அஞ்சக்கள்ளகோக்கன்'.

இடதுசாரி அரசியல், காவல்துறையின் ஆடுபுலி ஆட்டம் ஆகியவற்றுடன் எளிய மனிதர்கள் மாஃபியாக்களாக உருவெடுத்த உண்மைக் கதையை அதிரடியான திரைமொழியின் வழியே சித்தரித்து, இயக்குநராக அறிமுகமாகியிருந்தார் உல்லாஸ் செம்பன்.

இவர், நடிகரும் திரைக்கதை எழுத்தாளருமான, ‘அங்கமாலி டைரீஸ்' புகழ் செம்பன் வினோத்தின் தம்பி. தம்பியின் முதல் படத்துக்குத் திரைக்கதை எழுதியதுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துமிருந்தார் செம்பன் வினோத்.

இந்தப் படத்தைத் தமிழ் ரசிகர்களும் வரவேற்றிருந்த நிலையில், தற்போது இந்தச் சகோதரர்கள் கூட்டணி, ‘டிஸ்கோ' படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது.

இம்முறை மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் தொடங்கி, பிரபலமான சில தமிழ் நடிகர்களையும் ‘டிஸ்கோ’ படத்தில் இணைத்திருக்கிறது.

சர்வதேச மாஃபியா கதைக்குள் நகைச்சுவையை நுழைத்து அதிரடிப் பொழுதுபோக்குப் படமாக மலையாளம், தமிழில் ‘டிஸ்கோ’வை உருவாக்கியிருக்கிறார்கள்.

தமிழுக்கு வரும் செம்பன்!
காதலையும் களவாடும் உலகம்! | சுட்ட கதை 41

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in