காதலையும் களவாடும் உலகம்! | சுட்ட கதை 41

‘சிக்கு புக்கு’, ‘த கிளாசிக்’

‘சிக்கு புக்கு’, ‘த கிளாசிக்’

Updated on
2 min read

கொரியன் படங்களின் தாக்கம் 2000வது ஆண்டில் உலகெங்கும் உச்சத்தில் இருந்தது. அப்போது ஒரு மென்மை யான கொரியன் படம் உலகத் திரை ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பே தனி. அதுவொரு மென்மையான காதல் படம் வேறு.

அதுதான் ‘த கிளாசிக்’ (The Classic). அதை அப்படியே தமிழில் முயன்ற ஒரு படம் பற்றிப் பார்க்கலாம். ‘த கிளாஸிக்’கின் கதை எளிமையானது.

கதை நடக்கும் தற்காலத்தில் ஒரு காதல் கதையை சொல்லத் தொடங்கி, ஆங்காங்கே அறுபதுகளில் நடந்த மற்றொரு காதல் கதையை விவரித்து, இரண்டு கதைகளுக்கும் இருக்கும் தொடர்பை நிறுவுவதே இந்தப் படத்தின் திரைக்கதை உத்தி.

ஒரே கல்லூரியில் பயிலும் ஜி-ஹ்யே (நாயகி) - சாங்–மின் (நாயகன்) இருவரும் காதலிக்கிறார்கள். ஜி-ஹ்யேயின் தோழி சூ-க்யூங்கும் சாங்-மின்னைக் காதலிப்பாள். இதுபற்றி ஜி-ஹ்யேவுக்கு மெதுவாகத் தெரிய வரும்.

அப்போது ஜி-ஹ்யேவுக்கு ஒரு பழைய பெட்டி கிடைக்கும். அதில் பழைய கடிதங்களும் ஒரு நாட்குறிப்பும் இருக்கும். அந்தக் கடிதங்கள் ஜி ஹ்யேவின் தாய் ஜூ-ஹீயுடையவை. அவ்வப்போது இந்தப் பழைய கடிதங்களை ஜி-ஹ்யே எடுத்துப் படிப்பாள்.

அப்போதெல்லாம் ஜூ-ஹீயின் பழைய வாழ்க்கை நமக்கு ஃபிளாஷ்பேக்குகளாகக் காட்டப்படும். அதேவேளை, ஜி-ஹ்யே நிகழ்காலத்தில் அனுபவிக்கும் காதல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அந்தப் பழங்கால வாழ்க்கையில் தீர்வுகளும் கிடைக்கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in