மங்காத்தா 2-வுக்கு ரெடியான வெங்கட்பிரபு

மங்காத்தா 2-வுக்கு ரெடியான வெங்கட்பிரபு
Updated on
1 min read

விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. டைம் டிராவல் கதையான இதன் விஎப்எக்ஸ் காட்சிகளுக்காக அமெரிக்கா சென்று வந்தனர். ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் தயாரிப்பு தரப்பில் அதைக் குறைக்கச் சொன்னதாகக் கூறப்பட்டது.

சிவகார்த்திகேயன் அடுத்து ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் டிராப் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ‘மங்காத்தா’ படத்தின் 2-ம் பாகத்தை இயக்க இருக்கிறார் என்றும் அதற்கான டிஸ்கஷன் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, அஞ்சலி உள்பட பலர் நடித்து 2011-ல் வெளியான ‘மங்காத்தா’ சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.

மங்காத்தா 2-வுக்கு ரெடியான வெங்கட்பிரபு
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in