‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி
Updated on
1 min read

‘ரஜினி 173’ படம் பார்வையாளர்களை திருப்தி அடைய வைக்கும் என்று இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

‘ரஜினி 173’ படத்தினை இயக்கவுள்ளார் சிபி சக்கரவர்த்தி. இதனை ராஜ்கமல் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என தெரிகிறது. இதனிடையே இப்படம் தொடர்பாக முதன்முறையாக ‘வித் லவ்’ படத்தின் மேடையில் பேசியிருக்கிறார் சிபி சக்கரவர்த்தி.

அதில், “’ரஜினி 173’ அறிவிப்புக்குப் பின் எதிர்பார்க்காத பலர் வாழ்த்தினார்கள். இவனா பண்றான் என்று சிலர் பதட்டப்படுவது எனக்கு புரிகிறது. ரஜினி ரசிகராக, அவரது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கண்டிப்பாக படம் முடிந்து வெளியே வரும் போது திருப்தியுடன் வருவீர்கள். இது சத்தியம்” என்று அவர் தெரிவித்தார்.

‘ரஜினி 173’ படத்தில் ரஜினியுடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தினை முடித்துவிட்டு கமலுடன் இணைந்து நடிக்கவுள்ள படத்தினை தொடங்க ரஜினி முடிவு செய்திருக்கிறார்.

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு: டி20 உலகக் கோப்பை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in