பாரதிராஜா மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு: பிரேமலதா விஜயாகாந்த்

பாரதிராஜா மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு: பிரேமலதா விஜயாகாந்த்
Updated on
1 min read

சென்னை: “பாரதிராஜா பழகுவதற்கு மிகவும் இனிமையான ஒரு மனிதர். அவரது இழப்பு திரையுலகிற்கு பேரிழப்பு” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: ”பிரபல திரைப்பட முன்னணி இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று (10.06.2026) காலமானார் என்கிற செய்தி மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் முதன்முதலில் இணைந்து நடித்த திரைப்படம் தமிழ்செல்வன். தமிழ் பாரம்பரியத்தையும் கிராமியக் கதைகளையும் திரைப் படங்களுடன் இணைத்து, திரைப்படத்தை ஒரு பாடமாகத் திரையுலகிற்கு வழங்கி, திரையுலகின் பல்கலைக்கழகமாக விளங்கியவர் பாரதிராஜா.

விஜயகாந்த் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். அனைவரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான ஒரு மனிதர். அவரது இழப்பு திரையுலகிற்கு பேரிழப்பு. அவருடைய ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் திரையுலகினருக்கும், குடும்பத்தாருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. 

பாரதிராஜா மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு: பிரேமலதா விஜயாகாந்த்
‘ஹபீபி’ மனதை தொடும் காதல் கதை: இயக்குநர் விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in