

நடிகை மாளவிகா மனோஜ்
மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹபீபி’. இயக்குநர் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார் . ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் இப்படம் ஜூன் 12ம் தேதி வெளியாகிறது.
‘ஹபீபி’ அப்படியான திரைப்படமாக இருக்கும். தென்மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அருகிலுள்ள கிராமங்களின் பின்னணியில் நடக்கும் கதை இது. இப்படத்தைப் பார்த்த அரசியல் தலைவர்களும் முன்னணி இயக்குநர்களும் பாராட்டி இருக்கிறார்கள். கண்டிப்பாகப் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைத் தரும். இப்படத்தின் பாடல்களும் டிரெய்லரும் வரவேற்பைப் பெற்றுள்ளன” என்றார்.