

தம்பிதுரை இயக்கத்தில், சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்திரன், வி. ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘கோல்ட் கால்’. ஜி.என்.சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் சார்பில் கேசவ மூர்த்தி தயாரித்துள்ள இப்படம், செப்.18-ல் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் தம்பிதுரை கூறும்போது, “விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை நகைச்சுவையாகச் சொல்லும் படம் இது. விற்பனை பிரதிநிதிகளான 4 நண்பர்களுக்குள் ஏற்படும் காதல், மோதல், காமெடி ஆகியவற்றைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லி இருக்கிறோம்” என்றார்.