

மூன்று நாட்கள் விடுமுறையுடன் வந்திருக்கும் இந்த வார இறுதியைக் கொண்டாடும் விதமாக திரையில் வந்து ரசிகர்களைக் கவர்ந்த படங்கள் ஓடிடியில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த வாரம் என்ன பார்க்கலாம் என்பதற்கான ஓடிடி ரிலீஸ் பட்டியல் இது.
அருள்வான்:
கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி நடத்திருக்கும் தமிழ்ப் படம் ‘அருள்வான்’. ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்தப்படம், ஜூலை 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கல்வி கற்க விரும்பும் ஒரு பழங்குடியினச் சிறுமியின் போராட்டமும் அதற்கு உதவும் மாவட்ட ஆட்சியர் பற்றிப் பேசும் இந்தப் படம் செப்டம்பர் 4-ம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது.
அனந்தன் காடு:
ஆர்யா, இந்திரன்ஸ், சுனில், நிகிலா விமல், ரெஜினா, போஸ் வெங்கட், அஞ்சலி நாயர் உட்பட பலர் நடித்துள்ள ‘அனந்தன் காடு’ படத்தை ஜியேன் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார். 1980, 90-களின் அரசியல், சமூகப் பின்னணியில் உருவாகிருக்கும் இந்தப் படம், முக்கியமான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு எடுற்படுத்தும் பின்விளைவுகளில் இருந்து தப்பிக்க முயலும் மனிதர்களைப் பற்றி பேசுகிறது.
செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த மலையாளப் படம், மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 2-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
பல்லபுருசு:
உதய் சவுகான் இயக்கத்தில் சுதாகர் ரெட்டி, முரளிதர் கவுட், பிரஜ்வால் யாத்மா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘பல்லபுருசு’. தந்தை மகனுக்கு இடையே ஏற்படும் குடும்பப் பிரச்சினையை நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் இந்தத் தெலுங்கு படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அமேசான் ப்ரைம் வீடியயோ ஓடிடி தளத்தில் செப்டம்படர் 2-ம் தேதி வெளியாகி இருக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் காணக் கிடைக்கிறது.
வதலா:
வம்சி கிருஷ்ண அகேல்லா இயக்கி இருக்கும் இந்தத் தெலுங்கு படத்தில் ஜெகபதி பாபு, ஹிர்திகா ஸ்ரீனிவாஸ், ஸ்ரீனிவாஸ் அவசரலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிறர் பார்வையில் மனமொத்த தம்பதியாக தெரியும் இருவருக்கு இடையில் மூன்றாவதாக ஒரு நபர் வரும் போது ஏற்படும் மன அழுத்தம், போராட்டம் போன்றவை அமைதி இல்லாத ஓர் உளவியல் போராட்டமாக மாறுவதைப் பற்றி படம் பேசுகிறது. ஜூலை 17-ம் திரையரங்குகளில் வெளியான படம் செப்டம்பர் 3-ம் தேதி நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
டிசி:
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்திருக்கும் தமிழ் படம் ‘டிசி’. இதில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காவல் துறையின் வன்முறையால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தை காப்பாற்றப் போராடும் தேவாவும் அவனது நண்பர்களும் ஒரு கொடூரமான காவலரிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் கண்டடையும் நீதி, எதிர்பாராத உறவுகளைப் பற்றிப் படம் பேசுகிறது.
ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற டிசி படம், செப்டம்பர் 4-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஜிடிஎன்:
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன், பிரியாமணி, துஷ்ரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘ஜிடிஎன்’. இந்தப் படம் ‘இந்தியாவின் எடிசன்’ எனக் கூறப்படம் ஜி.டி.நாயுடுவைப் பற்றிய பயோபிக் ஆகும். ஆகஸ்ட் 7-ம் தேதி திரையில் வெளியான இந்தப் படம் செப்டம்பர் 4-ல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
கொரியன் கனகராஜு:
மெர்லபாகா காந்தி இயக்கதில் வெளியாகி இருக்கும் இந்தத் தெலுங்கு படத்தில் வருண் தேஜ், ரித்திகா நாயக், சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராயலசீமாவைச் சேர்ந்த கனகராஜு என்ற இளைஞரின் மீது கொரியாவில் இருந்து வந்த கப்பல் ஒன்றில் இருந்த ஆவி புகுந்து அவனை ஆட்டுவிக்கிறது. அதன் பிறகு கனகராஜு கொரியன் கனகராஜு ஆவதே படத்தின் கதை. ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்களில் வெளியான இந்தத் தெலுங்கு படம், செப்டம்பர் 4-ல் நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
உன்மத்தம்:
கிரண் தாஸ் இயக்கத்தில் குஞ்சாகோ போபன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள மலையாளப் படம் ‘உன்மத்தம்’. தனது கடந்த காலத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் காவலர் ஒருவர், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத வழக்கு ஒன்றை விசாரிக்க நேரிடுகிறது. அந்த வழக்கை அவர் தீவிரமாக விசாரிக்கையில் அது பல ரகசியங்களை வெளிக்கொண்டு வருகிறது. ஜூலை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், செப்டம்பர் 4-ல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
தி கோர்ட்:
பாலா.எஸ்.பி. இயக்கத்தில் யோகலக்ஷ்மி ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள தமிழ் வெப் தொடர் ‘தி கோர்ட்’. இது செப்டம்பர் 4-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஜகமே சங்கீதம்:
பாலநாத் சூர்ய பிரதாப் இயக்கத்தில் வெளியாக இருக்கும் தெலுங்கு வெப் தொடர் ‘ஜகமே சங்கீதம்’. இந்தத் தொடரில் பிரகாஷ் ராஜ், மதுபாலா, மேகா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 4-ம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருக்கும் இந்தத் தொடர் தமிழிலும் காணக்கிடைக்கிறது.