சர்ச்சை எதிரொலி: ‘ப்ரோ கோட்’ தலைப்பு மாற்றம்

சர்ச்சை எதிரொலி: ‘ப்ரோ கோட்’ தலைப்பு மாற்றம்
Updated on
1 min read

ரவி மோகன் நடித்து வரும் ‘ப்ரோ கோட்’ படத்தின் தலைப்பை மாற்றுவது உறுதியாகிவிட்டது.

ரவி மோகன் தயாரித்து, நடித்து வந்த ‘ப்ரோ கோட்’ படத்தின் தலைப்பு மாற்றப்படுவது உறுதியாகிவிட்டது. காரணம், அப்படத்தின் அறிமுக வீடியோவில் இருந்து ‘ப்ரோ கோட்’ தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. மேலும், அதனை ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ என மாற்றியிருக்கிறார்கள். விரைவில் புதிய தலைப்பை அறிவிக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.

கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘ப்ரோ கோட்’. ரவி மோகன் தயாரிப்பாளராகவும் மாறி இதனை தயாரித்து வந்தார். இப்படம் அறிவிக்கப்பட்ட உடனே ‘ப்ரோ கோட்’ தலைப்பை உபயோகிக்க கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இரண்டு தரப்புக்கும் இடையே விரைவில் சமரச ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

அறிமுக வீடியோவில் நீக்கப்பட்டுள்ள ‘ப்ரோ கோட்’ தலைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in