‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு

‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள வெற்​றி, கதா​நாயக​னாக நடித்​துள்ள படம், ‘பிளாக் கோல்​டு’. ஆக் ஷ்ன் திரில்​லர் படமான இதை தீரன் அருண்​கு​மார் எழுதி இயக்​கி​யுள்​ளார். பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், துளசி, பிக்​பாஸ் அபி​ராமி, ஏ.வெங்​கடேஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

எம்​எம் ஸ்டூடியோஸ் சார்​பில் எம்​.மூர்த்தி வழங்​கும் இப்​படத்​துக்கு சந்​தோஷ்கு​மார் வீரா​சாமி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். கவாஸ்​கர் அவி​னாஷ் இசை அமைத்​துள்​ளார்.

“ஓர் இளைஞனுக்​கும், நிழல் உலக வணிக மாபி​யாக்​களுக்​கும் இடையே நடை​பெறும் போராட்​டம் இப்​படத்​தின் கதை. நம் வாழ்​வில் சாதா​ரண​மாகக் கடந்து செல்​லும் ஒரு விஷ​யம், எப்​படி உலக அளவி​லான வணி​க​மாக மாறியது என்​ப​தைப் புது​மை​யான கதைக்​களத்​தில் சொல்​லும் படம் இது” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது. இதன் படப்​பிடிப்பு இப்​போது நிறைவடைந்​துள்​ளது. போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து வரு​கின்​றன.

‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு
“கங்கனாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை” - சொல்கிறார் டாப்ஸி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in