“கங்கனாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை” - சொல்கிறார் டாப்ஸி

“கங்கனாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை” - சொல்கிறார் டாப்ஸி
Updated on
1 min read

நடிகை டாப்​ஸி​யும் கங்​கனா ரனாவத்​தும் சில வருடங்​களுக்கு முன் கடும் மோதலில் ஈடு​பட்​டனர். சமூக வலை​தளங்​களில் இவர்​கள் மோதல் போக்​கில் ஈடு​பட்​டது சினிமா வட்​டாரத்​தில் பரபரப்​பாகப் பேசப்​பட்​டது. தனக்கு வரும் பட வாய்ப்​பு​களை டாப்ஸி பறிப்​ப​தாக கங்​கனா ரனாவத் குற்​றம் சாட்​டி​னார்.

அவர் நடிக்​கும் படங்​களை மாபி​யாக்​கள் தயாரிக்​கின்​றனர் என்​றும் கூறி​யிருந்​தார். கங்​க​னா​வின் சகோ​தரி ரங்​கோலி, டாப்​ஸியை ஒரு மலி​வான நகல் என்​றும் பி-கிரேடு நடிகை என்​றும் கூறி​யிருந்​தார். அதற்கு டாப்​ஸி​யும் பதிலளித்​தார்.

இந்​நிலை​யில், இப்​போது டாப்ஸி அளித்​துள்ள பேட்​டி​யில் எனக்​கும் கங்​க​னா​வுக்​கும் எந்த பிரச்​சினை​யும் இல்லை என்று தெரி​வித்​துள்​ளார். “நான் எப்​போ​தாவது அவருடன் சண்​டை​யிட்​டிருக்​கிறேனா என்று எனக்​குத் தெரிய​வில்​லை. இரண்டு பேர் மோதிக் கொண்​டால் சண்டை நடக்​கும்.

நான் ஒரு​போதும் அதைச் செய்​ய​வில்​லை. கங்​கனா எனக்கு சீனியர். அவருடன் பணிபுரிவ​திலோ அல்​லது அவருடன் நட்​பாக இருப்​ப​திலோ எனக்கு எந்த சிக்​கலும் இல்​லை.

அவரு​டைய சகோ​தரி என்னை ‘மலி​வான நகல்’ என்று அழைத்​தார். அவர் சிறந்த நடிகை என்​றால், அவருடைய நகல் என்று அழைப்​ப​தில் எனக்கு எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. கங்​க​னா​வுக்கு எதி​ராக நான் எது​வும் பேசி​ய​தில்​லை. நான் சொன்​னது போல், என் தரப்​பிலிருந்​து, எங்​களுக்​குள் எந்த சண்​டை​யும் இல்​லை.

ஆனால், அதிலிருந்து யாரோ ஒரு​வர் ஏதோ ஒரு வகை​யில் பயனடைந்​திருக்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார். அனுபவ் சின்ஹா இயக்​கத்​தில் டாப்ஸி நடித்​துள்ள ‘அஸ்ஸி’ படம் பிப்​.20-ல் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்று வருகிறது.

“கங்கனாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை” - சொல்கிறார் டாப்ஸி
ஜப்பானிலும் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in