ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அபாரம்

ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அபாரம்
Updated on
1 min read

சென்னை: ஹாக்கி இந்​தியா லீக் ஆடவர் போட்​டி​யில் தமிழ்​நாடு டிராகன்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்​கில் ஹைத​ரா​பாத் தூபான்ஸ் அணியை வீழ்த்​தி​யது.

ஹாக்கி இந்​தியா லீக் ஆடவர் போட்​டி​யின் முதல் கட்ட ஆட்​டங்​கள் சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்​தில் தொடங்​கின. இரவு 7.30 மணிக்கு நடை​பெற்ற முதல் போட்​டி​யில் அக்​கார்ட் தமிழ்​நாடு டிராகன்ஸ் அணி​யும், ஹைத​ரா​பாத் தூபான்ஸ் அணி​யும் மோதின.

இதில் ஆட்ட நேர முடி​வில் இரு அணி​களும் தலா 3 கோல்​கள் போட்டு சமநிலை​யில் இருந்​தன. இதையடுத்து வெற்​றியைத் தீர்​மானிக்க ஷூட்​-அவுட் முறை கடைப்​பிடிக்​கப்​பட்​டது. இதில் தமிழ்​நாடு டிராகன்ஸ் அணி​யினர் 4 கோல்​களும், ஹைத​ரா​பாத் அணி​யினர் 2 கோல்​களும் அடித்​தனர்.

இதைத் தொடர்ந்து ஷூட்​-அவுட் அடிப்​படை​யில் 4-2 என்ற கோல் கணக்​கில் தமிழ்​நாடு டிராகன்ஸ் அணி வெற்றி கண்​டது.

தமிழ்​நாடு டிராகன்ஸ் அணிக்​காக சோபர்​ஸ்பி தாமஸ், உத்​தம் சிங், கார்த்தி செல்​வம் ஆகியோ​ரும், ஹைத​ரா​பாத் அணிக்​காக அமன்​தீப் லக்ரா 2 கோல்​களும், ஆர்த்​தர் டி ஸ்லூவர் ஒரு கோலும் அடித்​தனர். ஷூட்​-அவுட்​டில் தமிழ்​நாடு டிராகன்ஸ் அணிக்​காக நேதன் எப்​ரம்​ஸ், பிளேக் கோவர்​ஸ், உத்​தம் சிங், முகமது ரஹீல் ஆகியோர் கோலடித்​தனர். ஹைத​ரா​பாத் அணிக்​காக ஜக்​காரி வாலஸ்​ 2 கோல்​களை அடித்​தார்​.

ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அபாரம்
மவுன படத்தை இப்​போது இயக்​கியது ஏன்? - ‘காந்தி டாக்​ஸ்’ இயக்​குநர் விளக்​கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in