ரொமான்ஸ் காமெடியாக உருவான ‘பா​தாம்​கீர்’

ரொமான்ஸ் காமெடியாக உருவான ‘பா​தாம்​கீர்’
Updated on
1 min read

அறி​முக இயக்​குநர் ஜெய் சக்தி பிர​காஷ் இயக்​கி​யுள்ள திரைப்​படத்​துக்கு ‘பா​தாம்​கீர்’ என தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் சிவகு​மார், ஆன் ஷீத்​தல் நாயகன், நாயகி​யாக நடிக்கின்றனர். சதீஷ், டேனியல் ஆன்னி போப், பிரதீப் ஜோஷ் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். யோகி ​பாபு கவுரவ வேடத்​தில் நடித்துள்ளார். விஷால் சந்​திரசேகர் இசையமைத்துள்ள இப்​படத்​துக்கு ஏ.குமரன் ஒளிப்​ப​திவு செய்துள்ளார்.

ரொமான்​டிக் காமெடி படமான இதை லார்ட்ஸ் பி தி இன்​டர்​ நேஷனல் புரொடக் ஷன்ஸ் சார்​பில் பிரதீப் ஜோஸ்​.கே தயாரித்துள்​ளார். இதன் முதல் தோற்ற போஸ்​டரை நடிகர் கவுதம் ராம் கார்த்​திக் வெளி​யிட்​டுள்​ளார்.

“குடும்​பத்​துடன் ரசிக்​கக்​கூடிய பொழுது ​போக்கு படமாக இது இருக்​கும். படப்​பிடிப்பு முடிந்​து, இறு​திக் ​கட்ட பின்​னணி பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. விரை​வில் டீஸர் வெளி​யிடப்​படும்” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

ரொமான்ஸ் காமெடியாக உருவான ‘பா​தாம்​கீர்’
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in