‘சித்தா’ அருண்குமார் - கமல்ஹாசன் கூட்டணி!

‘சித்தா’ அருண்குமார்  - கமல்ஹாசன் கூட்டணி!
Updated on
1 min read

கடந்த 2014-இல் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பாராட்டுப் பெற்றவர் எஸ்.யு.அருண்குமார். அதன்பிறகு ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’, ‘வீர தீர சூரன்: பாகம் 2’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

என்றாலும் அருண்குமாரின் அடையாளமாக இருப்பவை அவரு டைய அறிமுகப் படமும் சித்தார்த் நடிப்பில் 2023இல் வெளிவந்த ‘சித்தா’வும்தான். ‘வீர தீர சூரன்’ படத்தின் முன்கதையாகிய முதல் பாகத்தை நடிகர் விக்ரமின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை இயக்கவிருக்கிறார் அருண்குமார்.

இது பற்றி ராஜ்கமல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்தப் படத்தை கமலும் ஆர்.மகேந்திரனும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தின் தலைப்பு, கமலுடன் நடிக்கவிருக்கும் நடிகர்கள் ஆகிய தகவல்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

கமல்கையில் கசாப்புக்கடை கத்தி ஒன்றை வைத்திருப்பது போன்று இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் படமொன்றை ‘தோ வாரேன்’ என்கிற கமலின் பரிபாஷையுடன் பகிர்ந்திருக்கிறார்கள்.

‘சித்தா’ அருண்குமார்  - கமல்ஹாசன் கூட்டணி!
4000 வருடம் காத்திருக்கும் காதல்! - ஜி.வி.பிரகாஷ் நேர்காணல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in