4000 வருடம் காத்திருக்கும் காதல்! - ஜி.வி.பிரகாஷ் நேர்காணல்

4000 வருடம் காத்திருக்கும் காதல்! - ஜி.வி.பிரகாஷ் நேர்காணல்
Updated on
3 min read

இசையமைப்பு, நடிப்பு என இரண்டு தளங்களில் வெற்றிகரமாகப் பயணித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். ‘அமரன்’ படத்துக்காக மூன்றாம் முறையாகத் தேசிய விருதை வென்றவர். நடிகராகக் களமிறங்கிய பிறகு அதிகப் படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று கூறப்பட்டபோது, 'சூரரைப் போற்று', 'கேப்டன் மில்லர்', 'அமரன்' என ஒரு வெற்றி கரமான இசையமைப்பாளராக ‘கம்-பேக்’ கொடுத்தவர்.

அப்படிப்பட்டவர், சாம் சி.எஸ். இசையில் நாயகனாக நடித்துள்ள ‘இம்மார்ட்டல்’ இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அப்படம் குறித்தும் அவரது இசையுலகம் குறித்தும் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

Q

இந்த ஆண்டு உங்கள் இசையமைப்பில் இதுவரை வெளியான படங்களின் வெற்றிகளைக் கவனித்தீர்களா?

A

உண்மையாகவே மிகவும் சந்தோஷப்படு கிறேன். ஆண்டின் தொடக்கத்தில் வந்த ‘யூத்’, ‘ஹாப்பி ராஜ்’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’, ‘இருமுடி கட்டு’ இந்த நான்கு படங்களுமே ஹிட்! அடுத்து எனது இசையமைப்பில் ‘மண்டாடி’ வருகிறது.

நான் நடித்து ‘இம்மார்ட்டல்’ வெளியாகிறது. இந்த இரண்டு படங்களுமே எனக்கு முற்றிலும் புதிய ஜானர். இந்த ஆண்டு முடிவதற்குள் எனக்கு இன்னும் சில உயரங்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in