அகழ்வாராய்ச்சியை மையமாக கொண்டு உருவான ‘தாழ் திறவா’

அகழ்வாராய்ச்சியை மையமாக கொண்டு உருவான ‘தாழ் திறவா’
Updated on
1 min read

ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன் நடித்துள்ள படம், ‘தாழ் திறவா’. பர்மன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தைப் பரணி சேகரன் இயக்கியுள்ளார்.

சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத், குழந்தை நட்சத்திரங்களான லிஷா, லலித் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரர் த்ரில்லர் படமான இதற்கு ஷோ வெங்கட் இசை அமைத்துள்ளார். சாலமன் போஸ் டி.எஸ், ஜபெஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் டீஸர், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்கிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

“ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துகள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதை. தமிழில் அகழ் வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர், அமானுஷ்ய அம்சங்களை இணைத்து இப்படம் உருவாகியுள்ளது” என்று படக்குழு கூறியுள்ளது.

அகழ்வாராய்ச்சியை மையமாக கொண்டு உருவான ‘தாழ் திறவா’
Gangubai Kathiawadi: கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல் கங்குபாய் | திரை தேவதைகள் 17

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in