‘அப்பா குட்டி எனக்கு நெருக்கமான படம்!’ - ப்ரீத்தி அஸ்ராணி

நடிகை ப்​ரீத்தி அஸ்ராணி

நடிகை ப்​ரீத்தி அஸ்ராணி

Updated on: 
1 min read

விஜய் ஆண்​டனி, ப்​ரீத்தி அஸ்ராணி, பேபி லிதன்யா உள்​பட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘அப்பா குட்டி’. மு.மாறன் எழுதி இயக்கியுள்​ளார்.

நவ.20-ல் வெளியாகும் இப்​படம் பற்றி நடிகை ப்​ரீத்தி அஸ்ராணி கூறும்​போது, “அப்பா குட்டி எனக்​குத் தனிப்​பட்ட முறை​யில் நெருக்​க​மான படம். இயக்​குநர் மாறன் ஒவ்​வொரு காட்​சி​யையும் மிகத் தெளிவான பார்​வையுடன் உரு​வாக்​கி​ இருக்கிறார். இந்​தப் படத்​தில் ஒரு மகளாக அப்​பாவின் அன்​பையும் தியாகத்​தையும் உணரக்​கூடிய பல தருணங்​கள் இருக்​கின்​றன.

அம்​மாவின் அன்​பைப் பற்றி அதி​கம் பேசுகிறோம். ஆனால் அப்​பாக்​கள் தங்​களு​டைய அன்​பையும் உணர்​வு​களை​யும் அதி​கம் வெளிப்​படுத்​து​வதில்லை. அவர்​கள் நமக்​காகச் செய்​யும் தியாகங்​களை​யும் முயற்​சிகளை​யும் நாம் பல நேரங்​களில் கவனிப்பதில்லை. இந்​தப் படத்​தைப் பார்த்​து​விட்டு பலரும் தங்களு​டைய அப்​பாவிடம் உடனடி​யாகப் பேசுவார்​கள் என்று நம்பு​கிறேன். என்​னுடைய கதாபாத்​திரம் முதிர்ச்​சி​யான சிந்தனைகளைக் கொண்​டது. இந்​தப் படம் அப்பா – மகள் உறவை மட்​டும் பேசும் பட​மாக இருக்​காது” என்​றார்.

<div class="paragraphs"><p>நடிகை ப்​ரீத்தி அஸ்ராணி</p></div>
தமிழ், மலை​யாளத்​தில் உருவான ‘மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்’

X