

காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்’. அஹ்மது கபிர் இயக்கியுள்ள இதில் லக் ஷ்மி ஜோதிஷ், லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென், சோசம்மா, ரெஞ்சித் சேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அஹமது கபீர், ஹசன் ரஷீத் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். தமிழ், மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் டிச.4-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தில் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார்.
“காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் நம் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. நகைச்சுவை, காதல், இசை என அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் உறவுகளின் அழகையும் நமக்குப் பிடித்த மனிதர்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் படம் இது” என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.