

‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தை அடுத்து ‘மண்டேலா’ இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அப்படம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் அரிமா நம்பி, இருமுகன், நோட்டா, எனிமி ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அதன்படி விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது.
இதை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்ரமின் 63-வது படமாக இது உருவாகிறது. ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.