தனுஷ் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீலீலா

தனுஷ் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீலீலா
Updated on
1 min read

நடிகர் தனுஷ் ‘இட்லி கடை’, ‘தேரே இஸ்க் மே’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘போர் தொழில்’ இயக்​குநர் விக்​னேஷ் ராஜா இயக்​கிய ‘கர’ படத்​தில் நடித்து முடித்​துள்​ளார். இதையடுத்து அவர் நடிக்​கும் படத்தை ராஜ்கு​மார் பெரிய​சாமி இயக்​கு​கிறார். தனுஷின் 55-வது படமான இதை அவருடைய வுண்​டர்​பார் பிலிம்ஸ் மற்​றும் ஆர்​டேக் ஸ்டூயோஸ் இணைந்து தயாரிக்​கிறது.

இன்​னும் பெயர் வைக்​கப்​ப​டாத இப்​படத்​துக்​குச் சாய் அபயங்​கர் இசை அமைக்​கிறார். இந்​நிலை​யில் இப்​படத்​தில் நடிக்​கும் கதா​நாயகியைப் படக்​குழு அறி​வித்​துள்​ளது. அதன்​படி ஸ்ரீலீலா இ​தில் நாயகி​யாக நடிக்​கிறார்.

தெலுங்கு நடிகை​யான ஸ்ரீலீலா, சிவ​கார்த்​தி​கேயனின் ‘பராசக்​தி’ படம் மூலம் தமிழுக்கு வந்​தார். அதில் அவர் நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து தனுஷ் 55 படத்தில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு தவிர இந்தியிலும் நடித்து வருகிறார் ஸ்ரீலீலா.

தனுஷ் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீலீலா
தெலுங்​கில் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘காஞ்ச​னா’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in