சயின்ஸ் பிக் ஷன் கதை​யில் ரைசா வில்​சன்

நடிகை ரைசா வில்​சன்

நடிகை ரைசா வில்​சன்

Updated on
1 min read

கதை​யின் நாயகி​யாக ரைசா வில்​சன் நடிக்​கும் திரைப்​படம், ‘நோவா’; பேஸ் ஒன் - தி அரைவல். ‘ஆண்மை தவறேல்’ துரு​வா, அத்விதி ஷெட்​டி, கிருத்​திகா பிஸ்​வாஸ், ஜோ ஜான் சாக்​கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வா​தி​கா, ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

விளம்​பரப் படங்​களை இயக்​கிய மிலோ இதை இயக்​கு​கிறார். ராயல் ஃபார்ச்​சுனா கிரியேஷன்ஸ் தயாரித்​துள்ள படத்​தின் போஸ்ட் புரொடக் ஷன் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

நடிகை ரைசா வில்​சன் கூறும்​போது, “கதைக்​குள் இன்​னொரு கதை என்​கிற வித​மாக இந்​தப் படம் உரு​வாகி இருக்​கிறது. இதில் நான் ஃபிளாஷ்பேக் காட்​சிகளில் முக்​கிய​மான கதா​பாத்​திரத்​தில் வரு​கிறேன். ஆக் ஷன், த்ரில்​லர், சயின்ஸ் பிக் ஷன் கலந்து இந்த படம் உரு​வாகி இருக்​கிறது.

இது​வரை நான் இது​போன்ற கதை​யில், கதா​பாத்​திரத்​தில் நடித்ததில்​லை. கேரளா​வில் உள்ள மறையூர் காடு​களில் இதன் படப்​பிடிப்பு நடை​பெற்​றது. அனு​மதி கிடைப்​ப​தற்கே சிரம​மான சந்தன மரக் காடு​களுக்​குள் படப்​பிடிப்பு நடத்​தி​னார்​கள். இதில் ஆக் ஷன் காட்​சிகளி​லும் நடித்​துள்​ளேன்” என்​றார்.

<div class="paragraphs"><p><em>நடிகை ரைசா வில்​சன்</em></p></div>
Thigi: ஆழ்மன ‘ரகசிய’ வலி, துணிவைப் பேசும் ஹேமாவும் மகள்களும் | திரை தேவதைகள் 20

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in