என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வெற்றி

என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வெற்றி
Updated on: 
1 min read

‘8 தோட்டாக்கள்’ வெற்றி, என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் திரைப்படம், ‘பரீட்’. ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இதை ‘வெப்’ படத்தை இயக்கிய ஹாரூண் கதை எழுதி இயக்கியுள்ளார். நாயகியாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா நடிக்கிறார்.

சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜான் ராபின்ஸ் இசையமைக்கும் இப்படத்துக்கு கே.வி கிரண் ஒளிப்பதிவு செய்கிறார்.

“என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி தன்னுடைய பணியில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளை சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது” என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதன் முதல் தோற்றத்தை எஸ்.ஆர் பிரபு, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் ஆரி அர்ஜுனா வெளியிட்டனர்.

என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வெற்றி
ரூ.1 கோடி பரிசு பட்டியலில் இருந்து கபடி வீராங்கனையின் பெயர் நீக்கம்: ரிது நேகிக்கு நேர்ந்த சோகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in