ஜெ​யிலர் 2-வில் இருந்து விலகினார் ஷாருக்கான்?

ஜெ​யிலர் 2-வில் இருந்து விலகினார் ஷாருக்கான்?
Updated on
1 min read

நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கும் ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் நடித்து வருகிறார் ரஜினி​காந்த். இதில் எஸ்​.ஜே.சூர்​யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி​பாபு உள்பட பலர் நடிக்கின்​றனர். முதல் பாகத்​தைப் போலவே மோகன்​லால், சிவராஜ்கு​மார் ஆகியோர் கவுரவ வேடத்​தில் நடிக்​கின்​றனர்.

அதிக எதிர்​பார்ப்​புள்ள இப்​படத்​தில் இந்தி நடிகர் ஷாருக்​கான் முக்​கிய வேடத்​தில் நடிக்க இருப்​ப​தாக​வும் படத்​தில் அவருக்கு ஆக் ஷன் காட்​சிகள் இருப்​ப​தாக​வும் இப்​படத்​துக்​காக அவர் 5 நாட்கள் கால்​ஷீட் கொடுத்​த​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி இருந்தன. இந்​நிலை​யில் இப்​படத்​தில் இருந்து அவர் விலகிவிட்டதாகச் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதற்கிடையே அவருக்​குப் பதிலாகத் தெலுங்கு நடிகரும் ஆந்​திர மாநில துணை முதல்​வரு​மான பவன் கல்​யாண் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் தரப்பில் அதை மறுத்துள்​ளனர். இதே கதா​பாத்​திரத்துக்கு முதலில் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா​விடம் பேசினர். ஆனால், அவரும் மறுத்துவிட்டார்.

ஜெ​யிலர் 2-வில் இருந்து விலகினார் ஷாருக்கான்?
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in