‘உயர் நீதி​மன்ற உத்​தரவை மீறி பொது வெளியில் பேசி விட்டேன்’ - மன்​னிப்​புக் கோரினார் நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன்

Updated on
1 min read

நடிகர் ரவி மோக​னும், அவரது மனைவி ஆர்த்​தி​யும் பிரிந்து வாழ்ந்து வரு​கின்​றனர். ஆர்த்​தி​யிட​மிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதி​மன்​றத்​தில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்​துள்ள நிலை​யில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனை தொடர்​புப்​படுத்தி சர்ச்​சைகள் எழுந்​தன.

இந்​நிலை​யில் விவாகரத்து வழக்கு தொடர்​பாக ரவி மோகன் மற்றும் ஆர்த்தி என இரு தரப்​பும் பரஸ்​பரம் எந்த கருத்துகளை​யும் பொது வெளி​யில் தெரிவிக்​கக்​கூ​டாது என உயர் நீதி​மன்​றம் ஏற்கெனவே தடை விதித்து உத்​தர​விட்​டிருந்​தது. இந்​நிலை​யில் ரவி மோகனை பிரிவ​தாக பாடகி கெனிஷா சமூக வலைதளம் வாயிலாக பதி​விட்ட நிலை​யில், ரவி மோகன் கடந்த மாதம் 16ம் தேதி பத்​திரி​கை​யாளர் சந்​திப்பு நடத்தி தனது குழந்​தைகளுக்​காக அமைதி காப்​ப​தாக மனக்​ கு​முறலை கண்​ணீர் மல்க தெரிவித்தார்.

இந்​நிலை​யில் உயர் நீதி​மன்ற உத்​தரவை மீறி ரவி மோகன் ஊடகங்​களிடம் பேட்​டியளி்த்​துள்​ள​தாகக்​ கூறி ஆர்த்தி உயர் நீதிமன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். அந்த மனு விசாரணைக்கு வந்​த​போது தனது செயலுக்​காக மன்​னிப்பு கோரி ஊடகங்​களில் பொது அறி​விப்பு வெளி​யிட தயா​ராக இருப்​ப​தாக ரவி மோகன் தெரி​வித்​தார்.

அதைப் ​ப​திவு செய்து கொண்ட உயர் நீதி​மன்​றம் ஆர்த்​தி​யின் மனுவை முடித்து வைத்​தது. அதன்​படி ரவி மோகன் வெளியிட்டுள்ள பொது அறி​விப்​பில், உயர் நீதி​மன்ற உத்​தரவை மீறி பத்​திரி​கை​யாளர்​களிடம் திருமண தகராறு தொடர்​பாக பேசி விட்​டேன். இதற்​காக பாதிக்​கப்​பட்ட அனை​வரிட​மும் எனது வருத்தத்​தை​யும், மன்​னிப்​பை​யும் கோரு​கிறேன் என தெரிவித்துள்​ளார்​.

<div class="paragraphs"><p><em>நடிகர் ரவி மோகன்</em></p></div>
Thigi: ஆழ்மன ‘ரகசிய’ வலி, துணிவைப் பேசும் ஹேமாவும் மகள்களும் | திரை தேவதைகள் 20

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in