நான் பெறாத மகள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 40

நான் பெறாத மகள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 40
Updated on
3 min read

சினிமா எனக்கு பலரை அறி​முகம் செய்து வைத்​திருக்​கிறது. சினி​மாவுக்கு உள்​ளும் வெளி​யும் ஏராள​மானவர்​கள் எனக்கு பழக்​க​மாகி இருக்​கிறார்​கள். சிலர் என் சினிமா வாழ்க்​கை​யின் ஆரம்​பத்​தில் இருந்து இன்​று​வரை நண்​பர்​களாக தொடர்​கிறார்​கள். சிலர் புதி​தாகப் பழகி குடும்ப நண்​பர்​களாக ஆகி​யிருக்கி றார்​கள். அப்​படி ஆனவர்​களில் ஒரு​வர் ஷபா​னா.

நான் படப்​பிடிப்​புக்கு சென்​று​விட்டு வீட்​டுக்கு திரும்​புவதற்கு இரவு ஆகி​விடும். சில நேரம் இரவிலும் படப்​பிடிப்பு இருக்​கும் என்​ப​தால், சின்​னத்​திரை தொடர்​கள் பார்க்​கும் வாய்ப்பு அதி​கம் இல்​லை. நான் சின்​னத்​திரை​யில் நடித்​துக் கொண்​டிருந்த போது கூட நேரமின்​மை​யால் பெரும்​பாலும் பார்க்க வாய்ப்​பிருந்​த​தில்​லை. ஆனால் என் மனைவி அடிக்​கடி பார்ப்​பார்.

எப்​போ​தாவது சீக்​கிர​மாக வந்து வீட்​டில் நான் பார்க்​கும் போது ஏதாவது ஒரு சீரியல் ஓடிக்​கொண்​டிருக்​கும். அதைப் பார்ப்​பேன். அப்​படி எதேர்ச்​சை​யாக நான் பார்த்த சீரியல், ஜீ தொலைக்​காட்​சி​யில் வந்த ‘செம்​பருத்​தி’. அதில் பிரியா ராமன் மேடம் நடித்​திருப்​பார். இன்​னும் பல திறமை​யான நடிகர், நடிகைகள் நடித்​திருந்​தார்​கள்.

எனக்கு அதில் நாயகி​யாக நடித்த ஷபனாவை பார்த்த போது என் மகளைப்​பார்க்​கும் உணர்வு ஏற்​பட்​டது. அது ஏன் என்று எனக்கு தெரிய​வில்​லை. இதன் காரண​மாக அந்த தொடரை பார்க்​கும் ஆவல் ஏற்​பட்​டது. என் மகள் ஐஸ்​வர்​யா​விடம் அந்த சேனலின் ஆப்-ஐ போனில் டவுன்​லோடு செய்து தரச்​சொன்​னேன். பிறகு தின​மும் அத்​தொடரைப் பார்க்க ஆரம்​பித்​து​விட்​டேன். தின​மும் அந்​தக்​குழந்​தையை (ஷபா​னாவை) பார்த்தே ஆகவேண்​டும் என்ற ஆவல், பாசம் ஏற்​பட்டு விட்​டது.

இந்த நேரத்​தில் நான் ஒரு படப்​பிடிப்​புக்​காக பல்​லடம் சென்​றிருந்​தேன். அதில் என்​னுடன் நடித்​துக்​கொண்​டிருந்த பார்​வதி என்ற நடிகை (அவரும் என்னை அப்பா என்றே அழைப்​பார்) போனில் பேசிக்​கொண்​டிருந்​தார். திடீரென என்​னரு​கில் வந்​து, “உங்​களுக்கு ஒரு ஹாய் சொல்​லணு​மாம்​...” என்று போனை என்​னிடம் கொடுத்​தார்.

எனக்கு போனில் யார் இருக்​கிறார் என்​பது தெரி​யாது. யாரோ பேச நினைக்​கிறார்​கள் போலிருக்​கிறது என நினைத்து போனை வாங்​கினேன். அது வீடியோ கால். பார்த்​தால், ஷபா​னா. நான் ஆச்​சரியப்​பட்​டதை​போலவே அவருக்​கும் ஆச்​சரி​யம். என்​னைப் பார்த்​ததும், “ஐயோ, நீங்​களா? உங்​களை வந்து பார்க்​கிறதுக்கு ஒரு அப்​பா​யின்ட்​மென்ட் கொடுங்க” என்​றார்.

நான் என் உள்​ளத்​திலிருந்து “அப்​பாவை பார்க்​கிறதுக்கு அப்​பா​யின்​மென்ட் எல்​லாம் தேவை​யில்​லைம்​மா” என்று சொன்​னேன். பிறகு போன் எண்​களை பெற்​றுக் கொண்​டோம். தின​மும் குட் மார்​னிங், குட் நைட் மெசேஜ் அனுப்​புவேன்!’ சாப்​டீங்​களாடா என்னை பெத்த தாயீ ’ என்று என் மகள் ஜஷுவை கேட்​பது போலவே ஷபுவை​யும் கேட்​பேன்.

என் மகளுக்கு அடுத்​த​படி​யாக, அவர் மீதும் பாசம். என் மகள், மகனை​யும், என் மனை​வியை​யும் அவருக்கு மிக​வும் பிடிக்​கும். ஐசக்​கா, தம்​பி, அம்மா என்றே சொல்​வார். நானும் என் மனை​வி​யும் எங்​கே​யா​வது வெளி​யில் செல்​லும் போது போனில் அவர் வந்​தால் என்​மனை​வி​யிடம் பேசச்​சொல்​லு​வேன். “அம்மா எப்​படி​யிருக்​கீங்​க?” என்று அதிக நேரம் பேசிக்​கொண்​டிருப்​பார்​கள்.

அப்​படியே நாட்​கள் சென்று கொண்​டிருந்​தது. ஒரு முறை ‘செம்​பருத்​தி’ தொடரின் விழா ஒன்​றுக்​காக என்னை அழைத்​திருந்​தார்​கள். சென்​றேன். எல்​லோரும் என்​னிடம் வணக்​கம் சொன்​னார்​கள். அது பொது இடம் என்று கூட பார்க்​காமல் ஷபும்மா என் காலில் விழுந்து நமஸ்​காரம் செய்​தார். இதை நான் எதிர்​பார்க்​க​வில்​லை.

என் கண்​களில் ‘குபுக்​’கென்று கண்​ணீர் வந்து விட்​டது. கண்​களைத் துடைத்​துக்​கொண்​டேன். என் மகள் ஐஸ்​வர்​யாவை திரு​மணம் செய்து கொடுத்து மாப்​பிள்ளை வீட்​டுக்கு அனுப்​பும் போது என்ன உணர்வு ஏற்​பட்​டதோ, அதே உணர்வு அப்​போது ஏற்​பட்​டது. அவர் எழுந்​ததும் தலை​யில் கை வைத்து ‘நல்லா இருடா கண்​ணு” என்று ஆசீர்​வ​தித்து விட்டு வந்​தேன்.

பின்​னர் ஒரு​நாள் வீட்​டுக்கு வரச்​சொன்​னார். அப்​போது அவர் குன்​றத்​தூர் அருகே அப்​போது வசித்​தார். ஒரு தீபாவளி அன்​று, மகளுக்​கான சீர் வரிசை​யுடன் அவரைப் பார்க்க சென்​றேன். அப்​படி பழக்​கம் தொடர்ந்​தது. அவர் எங்​கள் குடும்​பத்​தில் ஒரு​வ​ராக, ‘நான் பெறாத மகளாக’ ஆகி​விட்​டார். பின்​னர் அவர் திரு​வேற்​காடு வந்​து​விட்​டார். அவரும் கணவரோடு எங்​கள் வீட்​டுக்கு வரு​வார்.. நாங்​களும் செல்​வோம்.

பின்​னர் ஒரு​முறை நிகழ்ச்சி ஒன்​றில், என் கையால் விருது கொடுப்​ப​தற்​காக என்னை அழைத்​தார்​கள். அப்​போது பிசி​யாக இருந்​த​தால் விழாவுக்கு வர இயலாத காரணத்தை சொன்​னேன்.

பிறகு, “இல்லை சார், உங்க பொண்​ணுக்கு நீங்​க​தான் கொடுக்​கணும்” என்று சொன் னார்​கள்.. ‘அப்​படி​யென்​றால் கண்​டிப்​பாக வரு​கிறேன்’ என்று சொல்​லி​விட்​டு, நேரத்தை அப்​படி இப்​படி மாற்​றி​விட்டு சென்​றேன்.

ஆனால், “நான் வரு​கிறேன்’ என்று ஷபா​னா​விடம் சொல்​லி​வி​டாதீர்​கள்’ என்​றேன். சரி என்று கேட்​டுக்​கொண்​டார்​கள். விழாவுக்கு சென்​றேன். அப்​போது விருது கொடுப்​ப​தற்​காக வந்த என்​னைப் பார்த்​ததும் அவருக்கு அதிக மகிழ்ச்​சி. அவருக்கு கண்​ணீரே வந்து விட்​டது. அவர் கணவர் நடிகர் ஆர்​யனும் என் மீது ‘அப்​பா’ என்று மிக​வும் பாச​மாக இருப்​பார்.

இப்​படி​யாக ஒரு தந்​தைக்​கும் மகளுக்​கு​மான உறவு தொடர்ந்து கொண்​டிருக்​கிறது. என் மகள் ஷபுவுக்​கும், மாப்​பிள்ளை ஆர்​யனுக்​கும் நிறைய வாய்ப்​பு​கள் வந்து வசதி​கள் பெருக இறைவன் அருளட்​டும்.

(திங்​கள்தோறும் பேசுவோம்)

நான் பெறாத மகள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 40
என் மகன் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 39

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in