முதன்மை கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடிக்கும் படம்

முதன்மை கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடிக்கும் படம்
Updated on
1 min read

காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் பா.விஜய் கார்த்திக்கேயன் இயக்குகிறார். இதில் ரேஷ்மா முரளிதரன், ஜென்சன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெய பிரகாஷ். விஜே பாரு, வினோதினி, சரத் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப் படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். பி ஸ்கொயர் என்டர் டெயின்மென்ட் மற்றும் சினிமா டூர் என்டர் டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “அரசுப் பள்ளியில் படிக்கும்‌ தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைக்க போராடும் ஒரு தந்தையின் கதையை மையப்படுத்தி குடும்ப உணர்வுகளை கொண்டு இப்படம் உருவாக இருக்கிறது. குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து பார்க்கக் கூடியதாக இப்படம் இருக்கும். சிவகங்கை மற்றும் சென்னையில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம்” என்றார்.

முதன்மை கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடிக்கும் படம்
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in