

செல்வேந்திரன் இயக்கத்தில் கடந்த 2020-இல் வெளியான படம் ‘கருப்பங்காட்டு வலசு’. அதில் கதாநாயகனாக அறிமுகமானவர் வளர்ந்து வரும் நடிகரான எபனேசர் தேவராஜ்.
இவர், வியட்நாமில் நடைபெற்ற 2026 சர்வதேச இயற்கை முறை உடற்கட்டமைப்பு போட்டியில் (WNBF) இந்தியாவின் சார்பில் பங்கேற்று இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
முன்னதாக, தேசிய அளவில் நடைபெற்ற ‘ஐசிஎன் புரோ குவாலிஃபையர்’ போட்டியில் ‘ஓபன் கிளாசிக்’, அதே பிரிவில் ‘மென் ஃபிட்னஸ்’ ஆகிய பிரிவுகளில் கலந்துகொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். அதன்மூலம் வியட்நாம் சர்வதேசப் போட்டியில் பங்குபெறும் தகுதியைப் பெற்றிருந்தார்.
மென்பொருள் துறையில் பணியாற்றிவரும் இவர், தொடர்ந்து படங்கள், இணையத் தொடர்களில் நடித்துக்கொண்டே சர்வதேச உடற்கட்டமைப்புப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவருக்கு உடற்கட்டமைப்புப் போட்டிகளில் பயிற்சி அளித்து வருபவர் யுவபிரகாஷ்.