“நல்ல கதைகளைத் தேர்வு பண்றது கஷ்டமா இருக்கு” - ஆரவ் நேர்காணல்

“நல்ல கதைகளைத் தேர்வு பண்றது கஷ்டமா இருக்கு” - ஆரவ் நேர்காணல்
Updated on
2 min read

ஹீரோ​வாக நடிக்​கத் தொடங்​கிய ஆரவ், சில படங்​களில் வில்​ல​னாக நடித்​திருந்​தார். இப்​போது மீண்​டும் கதா​நாயக​னாக 2 படங்​களில் நடிக்க இருக்​கும் அவர், சொந்​த​மாகத் தயாரிப்பு நிறு​வனம் ஒன்​றை​யும் தொடங்கி இருக்​கிறார். அவருடைய அடுத்​தடுத்​தப் படங்​கள் குறித்து பேசினோம்.

Q

ஹீரோ​வாத்​தானே நடிக்க ஆரம்​பிச்​சீங்க. ஏன் திடீர்னு வில்​லன் பாசம்?

A

ஹீரோ​வாகத்​தான் ஆரம்​பிச்​சேன். ஆனா, ஒரு நல்ல கதை இருக்​கு; அதுல நம்மை சிறப்பா வெளிப்​படுத்​தறதுக்கு ஸ்கோப் இருக்​கு, வில்​லனா பண்​ணினா இன்​னும் பவர்​புல்லா இருக்​கும்னு நினைச்சு தான் ‘கலக தலை​வன்’ ல நடிச்​சேன்.

அப்​புறம் அஜித் சாரோட ‘வி​டா​முயற்​சி’ வரும் போது, ஒரு டாப் ஹீரோவோட நடிச்சா நல்ல ரீச் கிடைக்​கும், அவங்​ககிட்ட இருந்து நிறைய கத்​துக்க முடி​யும்னு நினைச்​சேன். அதுக்​காகத்​தான் பண்​ணினேன். அப்​படி நடிச்​சதுல எனக்கு பெரு​மை​தான். இப்ப ஹீரோவா நடிக்க அதிக வாய்ப்பு வருது. இனி ஹீரோ​வாகத்​தான் நடிப்​பேன்னு நினைக்​கிறேன்.

Q

ஒவ்​வொரு படத்​துக்​கும் ஏன் அதிக டைம் எடுத்​துக்​கறீங்க?

A

நான் இன்​டஸ்ட்​ரிக்கு வந்து 10 வருஷ​மாகப் போகுது. இன்​னைக்கு மக்​கள் எல்​லா​வித​மான படங்​களை​யும் பார்க்க ஆரம்​பிச்​சிட்​டாங்க. பார்​வை​யாளர்​களை தியேட்​டருக்கு வர வைக்​கிற அளவுக்கு உற்​சாக​மான கதைகள்​தான் தேவை. நாம நடிக்​கிற படம், தியேட்​டர்ல போய் மக்​கள் பார்க்​கணும்னு நினைக்​கிறதா இருக்​கணும். இன்​னைக்கு பார்​வை​யாளர்​கள், இது நல்ல படமா? இல்​லை​யாங்​கறதை டிரெய்​லர் பார்த்தே முடிவு பண்ணி டறாங்க.

அதனால, வருஷத்​துக்கு ஒரு படம் பண்​ணி​னாலும் சரி​யான படமா கொடுக் கணும்னு நினைக்​கிறேன். அதுக்​காக நல்ல கதைகளைத் தேர்வு பண்​றது கஷ்டமா இருக்​கு. ரொம்ப நேரம் எடுக்​குது. 2 மணி நேரம் பார்​வை​யாளர்​களை மகிழ்விக்​கிறதுக்​காக ஏழு, எட்டு மாசம் அதுக்​குள்​ளயே சுத்த வேண்​டி​யிருக்​கு.

Q

ஓடிடி வந்த பிறகு நடிகர்​கள் பிசி​யா​யிட்​டாங்​கன்னு சொல்றாங்களே..?

A

சில ஆண்​டு​களுக்கு முன்​னால அப்​படி இருந்​தது. இப்ப அப்​படி யில்​லை. வெப் தொடர்​கள் எண்​ணிக்​கையே குறைஞ்​சிடுச்​சே. இப்ப சினிமா நிறைய உரு​வாகுது. அப்​படி வர்​றது ஆரோக்​கிய​மானது தான்.

Q

திடீர்னு தயாரிப்பு நிறு​வனம் தொடங்கி இருக்​கீங்​களே, ஏன்?

A

அது திடீர்னு இல்​லை. ஏற்​கெனவே முடிவு பண்ணி வச்​சிருந்​தது​தான். இங்க ஒரு நடிகனா இருக்​கறதே பெரிய பொறுப்​பு​தான். இப்ப எப்​படி இருக்​குன்​னா, ‘நமக்கு சம்​பளம் கிடைச்​சிருச்​சு; ஹீரோவா வந்து நடிச்​சுட்​டுப் போனா போதும்​’னு சும்மா உட்​கார முடி​யாது.

அந்த கதையை தேர்வு பண்​ணி, அப்​புறம் புரொடக் ஷன் கூட உட்​கார்ந்து எப்​படி பண்​ணலாம், எவ்​வளவு நாள்ல படத்தை ரிலீஸ் பண்​ணணும், எப்​படி புரமோஷன் பண்​ணணும்​?னு நிறைய பிளான் போட வேண் டியிருக்​கு. படங்​களை சரியா வெளி​யிட​ணும்​னு​தான் தயாரிப்பு நிறு​வனம் தொடங்​கினேன். அது​மட்​டுமில்​லாம அதுல நமக்கு சுதந்​திரம் கிடைக்​கும்.

Q

நிறைய ஹீரோக்​கள் தயாரிப்​பாளரா ஆனதுக்​கும் இது​தான் காரணமா இருக்​கு​மா?

A

இருக்​கலாம். தயாரிப்பு நிறு​வனம் தொடங்கி நிறைய பணம் சம்​பா​திக்​கணும்னு இல்​லை. தயாரிப்​பாளர் ஆகறதே பெரிய அழுத்​தம். இருந்​தா​லும் அதை ஏன் தொடங்​குறாங்​கன்​னா, ஒரு ஹீரோவா உங்​களை நிலை நிறுத்​திக்க, அது தேவையா இருக்​கு. முதல்ல பிரபல​மான தயாரிப்பு நிறு​வனங்​கள் அதி​கமா இருந்​தது. சினிமா பற்றி நல்லா தெரிஞ்​சவங்க இருந்​தாங்க.

இந்த ஹீரோவை வச்​சு, இவ்​வளவு பட்​ஜெட்ல படம் எடுத்​தா, இவ்​வளவு பிசினஸ் பண்ண முடி​யும் அப்​படிங்கற தெளிவு இருந்​துச்​சு. இன்​னைக்கு அப்​படி இல்​லை. எல்​லோருக்​கும் சம்​பளம் ஏறி​போச்​சு, பட்​ஜெட் அதி​க​மா​யிடுச்​சு. ஆனா, பிசினஸ் மட்​டும் அப்​படியே இருக்​குது. அதனால புதுசா வர்ற சில தயாரிப்​பாளர்​கள் 2 படங்​கள்​லயே போயிடறாங்க. அதனால ஹீரோவா நமக்​கும் பொறுப்பு இருக்​கு.

சினிமா பின்​னணி இல்​லாம என்னை போல எத்​தனையோ பேர் ஊர்ல இருந்து கிளம்பி வரணும்னு ஆசைப்​படறாங்க. இப்ப நான் இதுல வெற்றி பெறலைன்​னா, என்னை போல வர ஆசைப்​படறவங் களுக்​கு, ‘சினிமா கஷ்டம், வேண்​டாம்​’அப்​படிங்கற எண்​ணம் வந்​துரும். அதுக்​காகத் தொடர்ந்து வெற்றி கொடுக்​கணும். அது​மட்​டும்​தான் நிறைய பேரை சினி​மாவுக்​குள்ள வரவைக்​கும்.

Q

மற்ற மொழி வாய்ப்​பு​கள் எப்​படி?

A

வந்​திருக்​கு. தெலுங்​குப் படத்​துக்​காக பேசிட்டு இருக்​கிறோம். கால்​ஷீட் எல்​லாம் சரியா அமைஞ்சா அதுல நடிப்​பேன். அதுபற்றி அறி​விப்பு வரும். அடுத்து என் தயாரிப்​புல எல்​லோரும் ரசிக்​கிற மா​திரி​யான ஒரு படம்​ பண்​றேன்​. வெளி நிறு​வனம்​ ஒன்​றுக்​கும்​ ஹீரோ​வாக நடிக்கப் போறேன்.

“நல்ல கதைகளைத் தேர்வு பண்றது கஷ்டமா இருக்கு” - ஆரவ் நேர்காணல்
‘மகுடம்’ விமர்சனம்: விஷாலின் ‘விஷப் பரீட்சை’ எப்படி?
“நல்ல கதைகளைத் தேர்வு பண்றது கஷ்டமா இருக்கு” - ஆரவ் நேர்காணல்
Nooru Saami - செல்வி உடைத்த தாய்மை எனும் புனித பிம்பம் | திரை தேவதைகள் 31

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in