ஏலகிரி மக்களின் வாழ்வைப் பேசும் படம்

ஏலகிரி மக்களின் வாழ்வைப் பேசும் படம்
Updated on
1 min read

ஏலகிரி மலை​யில் வாழும் மக்​களின் வாழ்​வியல் முறையை​யும் தற்​போதைய அவர்​களின் நிலை​யை​யும் எடுத்​துரைக்​கும் வகை​யில் திரைப்​படம் ஒன்று உரு​வாகிறது. இன்​னும் பெயர் வைக்​கப்​ப​டாத இப்​படத்தை ‘போங்கு’ என்ற படத்தை இயக்​கிய தாஜ் இயக்​கு​கிறார். தமிழ்வாணன் தயாரித்து முதன்மை பாத்​திரத்​தில் நடிக்​கிறார்.

இதில் அபி​ராமி, சிஎஸ்கே சரவணன், பிக்​பாஸ் பிர​வீன், ‘ஜெய்​பீம்’ மொசக்​குட்​டி, அகத்​தி​யன் உள்பட பலர் நடிக்​கின்​றனர். தேவ சூர்யா ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு ஜோன்ஸ் ரூபட் இசை அமைக்​கிறார்.

“இப்​படத்​தின் கதை, 2010 கால​கட்​டத்​தைச் சுட்​டிக்​காட்​டும் வகை​யில் இருந்​தா​லும் தற்​போதைய கால​கட்​டத்​துக்​கும் பொருந்​தும் வகை​யில் உரு​வாகிறது.

இம்​மக்​களுக்​குப் படிப்​பு, விளை​யாட்​டில் திறமை இருந்​தும் இவர்​களுக்​கான அங்​கீ​காரம் மற்​றும் அடை​யாளம் அதி​கார​வர்க்​கத்​தால் எவ்​வாறு தடைபடு​கிறது? அதை மீறி அவர்​கள் அதில் சாதித்த பின்னரும் அவர்​களின் வாழ்​வா​தா​ரம் எந்​தளவு மாற்​றம் கண்​டுள்​ளது என்​பது பற்​றிப் பேசுகிற படம் இது” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

ஏலகிரி மக்களின் வாழ்வைப் பேசும் படம்
‘டாக்ஸிக்’ முதல் பாடல் வீடியோ எப்படி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in