வீரன் பட போஸ்டர்
வீரன் பட போஸ்டர்

'வீரன் படம் காலம் கடந்தும் நிற்கும்' - இயக்குநர் ஏஆர்கே சரவன் நம்பிக்கை

Published on

‘ஹிப்ஹாப்’ ஆதி, ஆதிரா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பத்ரி, சசி, சின்னி ஜெயந்த் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘வீரன்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘மரகத நாணயம்’ ஏஆர்கே சரவன் இயக்கியுள்ளார். ஜூன் 2-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படம் பற்றி அவர் கூறியதாவது:

இது சூப்பர் ஹீரோ கதை. ஒரு சூப்பர் ஹீரோவாக இந்தப் படத்திற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. அதற்கான நேரம் ஒதுக்கி, பொறுமையாக இன்று வரைக்கும் ஆதி எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். இது பொள்ளாச்சி கதை. அதற்கேற்ற முகம் தேவைப்பட்டதால் நடிகை ஆதிராவைக் கண்டுபிடித்தோம். அவர் மிகவும் சிரமப்பட்டு தமிழ்க் கற்று நடித்தார். இந்தப் படத்திற்கு இசை மிகவும் முக்கியம். அது நன்றாக வந்திருப்பதில் மகிழ்ச்சி. படத்தில் அனைவரும் சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளனர். சில படங்கள்தான் காலம் கடந்தும் நம் நினைவில் இருக்கும். அதுபோல 'வீரன்' படமும் இருக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறேன். இவ்வாறு ஏஆர்கே சரவன் கூறினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in