

எம்.எஸ்.மூர்த்தி எழுதி இயக்கி, இசை அமைத்து, மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரித்துள்ள படம் ‘99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு”. இதில் சபரி, ரோகிந்த் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். நாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா நடித்துள்ளனர். பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா என பலர் நடித்துள்ளனர். சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள், குடியிருப்பு வாசிகளை அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்துகின்றன.
அவை ஏன் நடைபெறுகின்றன? அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பதை ஹாரர் கலந்து சொல்லும் படம் இது.
இதில் 3 விதமான ஆன்மீகம் சார்ந்த பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ‘அருவா மீசைக்காரன்’ என்ற கருப்பசாமி பாடலும், ‘யாரு பிள்ளையாரு’ என்ற விநாயகர் பாடலும் இடம்பெற்றுள்ளது. படத்தை மார்ச் 6-ல் வெளியிடுகிறோம்” என்றார் எம்.எஸ்.மூர்த்தி.