

நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பை முடித்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இதையடுத்து அவர் ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். 47 வருடங்களுக்குப் பிறகு இந்திய சினிமாவின் இரண்டு திரை ஜாம்பவான்கள் இணையும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் இணைந்து நடிக்கும் படத்தின் புரமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் ரஜினி - கமல் இருவரும் மிரட்டலான ரெட்ரோ தோற்றத்தில் வருகின்றனர். பின்னணி இசையும் பிரம்மாண்டமான அரங்கமும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகின்றன. யார் ஹீரோ? என்று இருவரும் கேட்கும் இந்த புரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.