AK MOTO RIDE | மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்

AK MOTO RIDE | மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்
Updated on
1 min read

சென்னை: 'ஏகே மோட்டோ ரைடு' என்ற சுற்றுலா நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஜித் குமார் வெளியிட்ட அறிக்கையில், “இந்த மோற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்... “வாழ்க்கை ஓர் அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்.” மோட்டார் சைக்கிள்கள் மீதான எனது ஆர்வத்தை தொழிற்முறை முயற்சியாக மாற்றும் நோக்கில் ஏகே மோட்டோ ரைடு (AK MOTO RIDE) என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் மட்டுமல்லாமல் சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப் பயணங்களை வழங்கும். இதற்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப் பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல் திறனை உறுதி செய்து உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ‘ஏகே மோட்டர் ரைடு’ வழங்கும்.

தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபு பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்” என்று அஜித் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in