“என் அடுத்த படத்தின் நாயகன் ரிச்சர்ட் தான்” - இயக்குநர் மோகன்.ஜி தகவல்

“என் அடுத்த படத்தின் நாயகன் ரிச்சர்ட் தான்” - இயக்குநர் மோகன்.ஜி தகவல்

Published on

“என்னுடைய அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் தான்” என இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார். ‘பகாசூரன்’ படத்தைத் தொடர்ந்து புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ள படம் ‘பகாசூரன்’. கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் ‘பகாசூரன்’ படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே தனது அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மோகன்.ஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “இவர் யார் எனத் தெரிகிறதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி. அப்புறம், முக்கியமான செய்தி... என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் தான். அறிவிப்பு விரைவில்...” என்று பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in