Published : 02 Dec 2022 06:44 PM
Last Updated : 02 Dec 2022 06:44 PM

டிச.4-ல் வெளியாகிறது விஜய்யின் ‘வாரிசு’ இரண்டாவது சிங்கிள்

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

அண்மையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து எம்.எம்.மானசி பாட, பாடல் வரிகளை விவேக் எழுதியிருந்தார். இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலாக ‘தீ தளபதி’ என்ற பாடல் டிசம்பர் 4-ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடித்த ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விஜய்யின் 30 ஆண்டு திரைத்துறை பயணத்தை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x