வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ‘தேவராளன் ஆட்டம்’ பாடல் வீடியோ

வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ‘தேவராளன் ஆட்டம்’ பாடல் வீடியோ
Updated on
1 min read

'பொன்னியின் செல்வன் பாகம் 1' படத்தில் இடம்பெற்றுள்ள 'தேவராளன் ஆட்டம்' பாடல் வீடியோ அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெறுள்ள 'தேவராளன் ஆட்டம்' பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in